காங்கோ விமான விபத்து 
செய்திகள்

காங்கோ விமான விபத்தில் 18 பேர் பலி

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள வடக்கு கிவு மாகாணத்துக்குட்பட்ட கோமா நகரில் இருந்து இன்று தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் 19 பேருடன் புறப்பட்டு சென்றது.

பேனி நகரை நோக்கி செல்லவிருந்த அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கோமா நகரின் அருகாமையில் மேப்பன்டோ என்ற இடத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழ்ந்து, நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது.

மேலும், விமானம் கீழே விழுந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.