திருவனந்தபுரம்:
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் கொலையை தொடர்ந்து கேரளாவில் பதட்டம் நீடித்து வருகிறது. மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி பினராயி விஜயனை கவர்னர் சதாசிவம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர் இன்று ஆர்.எஸ்.எஸ். - பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை அழைத்து பேசினார்.
பின்னர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் அரசியல் மோதலை தடுக்க அடுத்தக்கட்டமாக வருகிற 6-ந் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசியல் மோதலை தடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்றார்.