கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் 
செய்திகள்

கேரளாவில் கள்ளுக்கடைகள் 13-ந் தேதி முதல் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் கள்ளுக்கடைகள் வருகிற 13-ந் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஊரடங்கிலும் தளர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் மக்கள் அதிகம் கூடும் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டே இருக்கிறது. மது கடைகள் இப்போது திறக்கப்படாது. எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மாநிலம் முழுதும் கள் இறக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எனவே கள்ளுக்கடைகளை வருகிற 13-ந் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.