செய்திகள்

ராமநாதபுரத்தில் பிக் பாக்கெட் அடித்த 3 பெண்கள் கைது

ராமநாதபுரத்தில் பஸ்சில் பயணம் செய்தவரிடம் பிக் பாக்கெட் அடித்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் சின்ன கடைத்தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. இவரது மனைவி பானு. இவர் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு மினிபஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

ரமேஷ் தியேட்டர் அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது பானுவின் அருகில் நின்றிருந்த 3 பெண்கள் கைப்பையை திருட முயன்றனர்.

இதை கவனித்த பானு கூச்சலிட்டார். உடனே பஸ்சில் இருந்த சக பயணிகள் 3 பெண்களையும் பிடித்து ராமநாதபுரம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி, கோவில்பட்டி மஞ்சள்தோப்பைச் சேர்ந்த காளி என்ற காளீஸ்வரி (வயது 26), பொன்னாத்தாள் (22), சேலம் ஊரணித்தெருவைச் சேர்ந்த தேவி என்ற முத்துமாரி (22) என தெரியவந்தது.

இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT