செய்திகள்

உலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரான்ஸ் அதிபர்

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும் அந்நாட்டு அதிபர் எழுந்து நின்று ஆடியபோது எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #MacronCelebrates

மாலை மலர்

ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பிரான்ஸ் அணி ஒவ்வொரு கோல் போடும்போதும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம்போட்டதையும், ஆரவாரமாக முழக்கம் எழுப்பியதையும் காண முடிந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மைதானத்திற்கு வந்திருந்து போட்டியை கண்டுகளித்தார்.