இருதரப்பினர் மோதல் 
செய்திகள்

இருதரப்பினர் மோதல்- 4 பேர் கைது

பேட்டை அருகே இருதரப்பினர் மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேட்டை:

பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பிரவீன்குமார் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா மகன் நம்பிராஜன் (25). டிரைவர்களான 2 பேரின் கார்களும் மோதிக்கொண்டது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரவீன்குமாருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த துரை மகன் மாரியப்பனும், நம்பிராஜனுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் மகன் சட்டநாதன் ஆகியோர் சேர்ந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன், சட்டநாதன், பிரவீன்குமார், மாரியப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.