செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 காசுகளும், டீசல் ரூ.0.89 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மாலை மலர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகிறது. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.01-க்கும், டீசல் ரூ.58.61-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.70.24-க்கும், டீசல் ரூ.59.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.