பெட்ரோல் குண்டு வீச்சு (மாதிரி படம்) 
செய்திகள்

ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- 3 வாகனங்கள் சேதம்

மன்னார்குடி தஞ்சை சாலையில் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தஞ்சை சாலையில் வசித்து வருபவர் நடராஜன். ஒப்பந்ததாரரான இவரது வீட்டின் மீது இன்று  காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் நடராஜன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.