சென்னை:
பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறியிருந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சிறைக் கைதிகள் உரிமை மையம் சார்பில் வக்கீல் புகழேந்தி தமிழக- கர்நாடக அரசு தலைமைச் செயலாளர்களுக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில் சுப்ரீம் கோர்ட்டு வழி காட்டுதல்படியும், ஐ.நா. மனித உரிமை விதிப்படியும் ஒரு கைதிதான் வசிக்கு இடத்திற்கு மிக அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட வேண்டும். குடும்பத்தாரை சந்திக்க வசதியாக விதிக்கப்பட்டுள்ள இந்த சட்ட விதியின்படி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.