அஞ்சலி செலுத்திய ஆளூர் ஷாநவாஸ் 
செய்திகள்

பீட்டர் அல்போன்ஸ் மனைவி காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பீட்டர் அல்போன்ஸ். இவரது மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்.

மாலை மலர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பீட்டர் அல்போன்ஸ். இவரது மனைவி ஜெசிந்தா. இவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளூர் ஷாநவாஸ் தனது டுவிட்டரில் ‘‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அருமை அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். ஆழ்ந்த இரங்கல்!’’ எனத் தெரிவித்துள்ளார்.