பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள கட்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. கூலித்தொழிலாளி. அவரது மனைவி ஈஸ்வரி (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். தங்களது குடும்பத்துடன் கட்டக்காடு அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். அதே தோட்டத்தில் மீனாட்சி (50) என்பவரும் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
ஈஸ்வரிக்கும், மீனாட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பிறகு ஈஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக மீனாட்சி கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.