விபத்து 
செய்திகள்

பெரும்பாறை அருகே 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பெரும்பாறை அருகே 150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்தன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் கம்பங்கள் சேதமடைந்து மலை கிராமங்கள் இருளில் மூழ்கின.

இந்த நிலையில் பண்ணைக்காட்டில் இருந்து கூடம் நகர் செல்லும் மலைச்சாலையில் பாறைகள் உருண்டது.

இதனால் விவசாயிகள் விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புல்லாவெளி - ஏணிக்கல் சாலையில் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் குதித்த பின்னர் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT