செய்திகள்

ஆற்காட்டில் ஓரின சேர்க்கையில் வாலிபர் கொலை: எலக்ட்ரீசியன் கைது

ஓரின சேர்க்கையில் ஈடுபட வாலிபரை அழைத்து சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு:

ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சாந்தி. இவர்களது மகன் பார்த்தீபன் (வயது27) மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் வேப்பூரில் ஒரு விவசாய கிணற்றில் பார்த்தீபன் பிணமாக மிதந்தார். ஆற்காடு போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து வெங்கடேசன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் பல நாட்களாக பார்த்தீபன் உடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தேன். இது பற்றி தெரிந்த உறவினர்கள் கண்டித்தனர். ஆனால் தன்னால் ஓரினச் சேர்க்கையை கைவிட முடியவில்லை.

இதனால் பார்த்திபனை 4 நாட்கள் முன்பு மீண்டும் ஓரினச் சேர்க்கைக்காக அழைத்து சென்றேன். பின்பு இது பற்றி வீட்டில் கூறிவிடுவாரோ? என்று பயந்து கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT