செய்திகள்

பேரணாம்பட்டு அருகே பெண் அடித்து கொலை

பேரணாம்பட்டில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோடு கலைஞர் நகரில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப் அருகில் இன்று காலை பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, பேரணாம்பட்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் பேரணாம்பட்டு அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்த சிங்காரம் மனைவி லலிதா என்பது தெரிய வந்தது.

லலிதாவின் உடலை மீட்ட போலீசார், கொலையாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT