தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நேற்று பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட வேலூர் மேற்கு மாவட்டம், திருப்பத்தூர் நகர், ஒன்றிய பொதுச் செயலாளர் ஆர்.முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.