பெரியார் சிலை 
செய்திகள்

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு  வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். 

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.