வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.
கோப்புப்படம்
56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது. நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது.
பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.