பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் வழியாக ஆந்திர மாநிலம் அரசு பஸ் திருப்பதியில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்தது. டிரைவர் ரமணன் பஸ்சை ஓட்டினார்.
தும்பாக்கம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். அப்போது முந்தி செல்வது குறித்து தகராறில் ஈடுபட்டு டிரைவர் ரமணனை தாக்கி தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய காக்கவாக்கத்தை சேர்ந்த ராஜசேகரை கைது செய்தனர்.