பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள தும்பாக்கம் கிராமத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஊத்துக்கோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் முதியவர் மோதி பலியானார். அவர் யார் என்று தெரியவில்லை.
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் ஷேர் ஆட்டோவும், காரும் மோதிக்கொண்டது. இதில் ஷேர் ஆட்டோவில் இருந்த பேட்டைமேடு கிராமத்தை சேர்ந்த சிவராஜ், அவரது மனைவி நாகம்மாள், மகள் சஞ்சனா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.