செய்திகள்

பெரியமேட்டில் நகை திருடிய 2 பேர் கைது

பெரியமேட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

பெரியமேடு நடேசன் நகரைச் சேர்ந்தவர் நிரஞ்சன். இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் அடகு வைத்த 2 பவுன் நகையை மீட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். அப்போது நகையை மோட்டார் சைக்கிளிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது நகை திருடு போயிருந்தது.

இதுகுறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி சூளையைச் சேர்ந்த அஜித், நரேந்தரன் ஆகியோரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே அருண்குமார், நேமிசந்த் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

SCROLL FOR NEXT