தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 3 வருடங்களாகவே காலனி பகுதியில் தண்ணீர் வினியோகம் சீராக வர வில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவதானப்பட்டி - வைகை அணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் சீராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.