தேனி:
ஆண்டிப்பட்டி டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் கண்டக்ராக வேலை பார்த்து வருகிறார். அதேபஸ்சில் டிரைவராக மதுபாலா என்பவர் பணிபுரிந்துள்ளார்.
சம்பவத்தன்று பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டுக்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது அனுமார் கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற ராமராஜ் என்பவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் டிரைவர் மதுபாலா பயந்து பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அவரை வழிமறித்த ராமராஜின் சகோதரர் ராம்கி, மதுபாலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.