பேராவூரணி:
பேராவூரணி செல்வ விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலுப்பிள்ளை. இவரது மனைவி பாப்பு என்ற நாகம்மாள் (வயது 60). வேலுப்பிள்ளை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். அது முதல் நாகம்மாள் மனநிலை பாதிக்கப்பட் டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 ந்தேதி நாகம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 18-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கணேசன் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.