பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட காட்சி. 
செய்திகள்

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை

வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு சிறுநீர், ரத்த பரிசோதனை குறித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மாதந்தோறும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

பேரறிவாளன் 2 மாதம் பரோலில் சென்றபோது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரோல் முடிந்து மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கடந்த 13-ந் தேதி அவரை வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று பேரறிவாளன் மீண்டும் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செயல்பட்டார். அங்கு சிறுநீர், ரத்த பரிசோதனை குறித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.