பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் வீடியோவில் தன்னை குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த வீடியோ பதிவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.