கைது 
செய்திகள்

பேரளம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

பேரளம் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நன்னிலம்:

பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்திராமேரி (பொறுப்பு) பேரளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறுபுலியூர் அல்லிக்குளம் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.