கைது 
செய்திகள்

பேரளம் அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் சாராயம் பறிமுதல்- 2 பேர் கைது

பேரளம் அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர்.

நன்னிலம்:

பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் கொல்லுமாங்குடி- நெடுங்காடு சாலையில் பளையார் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு மொபட்டும், ஒரு காரும் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக வந்தது. அவற்றை போலீசார் தடுத்து நிறுத்தி, சோதனை செய்தபோது அதில் பாண்டிசேரி பாக்கெட் சாராயம் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் சாராயம் கடத்தி வந்தவர் குத்தாலம் அருகே உள்ள வாசல் பெரிய தெருவை சேர்ந்த ரஞ்சித் (23) என்பதும், காருக்கு முன்பு அதற்கு பைலட்டாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் வில்லியநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணிமாறன் (22) என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், மணிமாறன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் காரில் கடத்தி வந்த 400 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT