கைது 
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்:

பேரளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருக்கொட்டாரம் அருகே வேகமாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர், தரங்கம்பாடி தாலுகா மேல மாத்தூரை சேர்ந்த சந்திரவேலு (வயது23) என்பதும், அவர் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரவேலுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT