கோவா கடற்கரை 
செய்திகள்

கோவா கடற்கரையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கோவா கடற்கரையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய அஸ்தமனத்தை சுற்றுலா பணிகள் ஆர்வமாக படம்பிடித்ததுடன், வழியனுப்பியும் வைத்தனர்.

2020-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. நாளை 2021-ம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு உலகில் உள்ள அனைவருக்கும் அபாயகரமானதாக இருந்தது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு நாடுகளும் கொரோனா அரக்கனின் பிடியில் சிக்கி தவித்தது.

தற்போது ஒரு வழியாக கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் 2020-ம் ஆண்டு முடிவடைவதால் கோவா மிரமர் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பார்வையிட குவிந்தனர். அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டதுடன், குட்பை சொல்லி வழியனுப்பியும் வைத்தனர்.