மணல் கடத்தல் 
செய்திகள்

பழவேற்காடு பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

பழவேற்காடு பகுதியில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

பழவேற்காடு பகுதியில் சிலர் மணல் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பழவேற்காடு கூனங்குப்பம் சவுக்கு தோப்பு பகுதியில் சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

போலீசார் அருகில் செல்வதற்குள், மணல் அள்ளிய 2 பேர் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த டிராக்டரை திருப்பாலை வனம் போலீசார் பறிமுதல் செய்தனர்.