செய்திகள்

பரங்கிமலை ரெயில் விபத்தின் எதிரொலி - பழவந்தாங்கலில் ரெயில்வே தடுப்புகள் அகற்றம்

சென்னை பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தின் தடுப்புச் சுவரை ரெயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை பரங்கிமலையில் கடந்த மாதம் மின்சார ரெயிலில் படியில் பயணம் செய்தவர்கள் ரெயில்வே தடுப்புகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளையும் கண்டனங்களையும் உருவாக்கியது. மேலும், ரெயில்வே தடுப்புகளை அகற்றுமாறு ரெயில்வே துறை அதிகாரிகாளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.