செய்திகள்

ஒடிசா: மோசமான வானிலையால் சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிக்காப்டர்

ஒடிசா மாநிலம் கோரபுட்டில் மோசமான வானிலை காரணமாக ஹெலிக்காப்டர் ஒன்று அவசராமக சாலையில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் ஹெலிக்காப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. மோசமாக வானிலை காரணமாக பவன் ஹான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த ஹெலிக்காப்டர் கோரபுட் மாவட்டத்தில் தரையிறக்கப்பட்டது.

ஹெலிக்காப்டரானது புவனேஸ்வர் நகரில் இருந்து கோரபுட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படிருந்த ஹெலிகாப்டர் பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது.

கோரபுட்டில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களை அங்கிருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த ஹெலிகாப்டர் சென்றது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.