விபத்து பலி 
செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே செருப்பு கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு தர்மராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று தர்மராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜ் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த தர்மராஜிக்கு எப்சி அமுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.