பாவூர்சத்திரம்:
கீழப்பாவூரைச் சேர்ந்தவர் முருகன் என்ற பெரியசாமி. இவர் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி ஒன்று உள்ளது. இதை மார்க்கெட் அருகே ஒரு எடைமேடை அருகில் கடந்த 25-ந் தேதி நிறுத்தி வைத்து இருந்தார். நள்ளிரவில் மர்மநபர்கள் லாரியை கடத்தி சென்றுவிட்டனர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் லாரி கிடைக்கவில்லை.
இதுகுறித்து முருகன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாரீஸ்வரி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ஏட்டுகள் குமரேச சீனிவாசன், தங்கதுரை, அருணாகரன், மகேஷ் ஆகியோர் அடங்கிய தனிபடை சாத்தூர் பகுதிக்கு சென்றது. அங்கு லாரியை கடத்தி சென்ற கீழப்பாவூர் ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜ்குமார் (வயது 24), சுடலையாண்டி மகன் வினோத்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் லாரியை கடத்துவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.