பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (வயது19). இவர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று மாலை பட்டுக்கோட்டை அருகே உதயசூரிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் கிஷோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தடுமாறி கீழே விழுந்த கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை போலீசார் கிஷோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.