கொள்ளை 
செய்திகள்

பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஆவடி:

பட்டாபிராம், சத்திரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அன்னம்பேடு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தனர்.