திருநின்றவூர்:
பட்டாபிராம், சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.
இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். வீட்டு சாவியை வாசல் அருகே மறைத்து வைத்துஇருந்தார்.
திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 14 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
மேலும் வீட்டில் வளர்த்து வந்த 2 நாய்களையும் காணவில்லை. கொள்ளையர்கள் நாய்களை அடித்து கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது.
மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதால் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி விசாரணை நடத்தி வருகிறார்.