செய்திகள்

ஒரிசாவில் 10 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்

புவனேசுவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிதாக 10 மந்திரிகள் இன்று பதவி ஏற்றனர். இவர்களில் 6 பேர் கேபினட் மந்திரிகள். 4 பேர் இணை மந்திரிகள்.

புவனேசுவர்:

ஒரிசாவில் முதல்-மந்திரி நவீன்பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது. மந்திரி சபையில் மாற்றம் செய்ய நவீன்பட்நாயக் முடிவு செய்தார். அதன்படி 10 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். இவர்கள் கட்சி பணியாற்ற போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக 10 மந்திரிகள் இன்று பதவி ஏற்றனர். இவர்களில் 6 பேர் கேபினட் மந்திரிகள். 4 பேர் இணை மந்திரிகள். புவனேசுவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் 10 மந்திரிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.