செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை ஒத்திவைப்பு - டெல்லி நீதிமன்றம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி பாடியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram

புதுடெல்லி:

முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த தடையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை டெல்லி பாடியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல தடை கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரை அமெரிக்கா செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram

SCROLL FOR NEXT