பாப்பாரப்பட்டி அருகே உள்ள ராமனூர் ஏரிக்கரை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (வயது 30) என்பவர் மது பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.