பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சி பாலாஜி நகரில் வசித்து வருபவர் சரவணன் மனைவி மீனா. வயது 35, இவரது குடிசை வீட்டில் திடீரென்று ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக முற்றிலும் எரிந்துவிட்டது. உடனடியாக தீயை மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.15 ஆயிரம் சேதம் ஏற்பட்டது.
பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் நல்லசிவம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.