செய்திகள்

மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கல்லறை இடிக்கப்படாது - ஓ.பன்னீர் செல்வம்

குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கல்லறை இடிக்கப்படாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.#TNAssembly #Panneerselvam

மாலை மலர்

சென்னை:

சென்னை சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. மாதவரம் சுதர்சனம் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுகையில், ‘‘ மூலக் கொத்தளம் இடுகாட்டில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்காக அங்குள்ள தாளமுத்து நடராஜன் கல்லறை உள்பட மொழிப்போர் தியாகிகள் கல்லறைகள் இடிக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. அந்த நினைவிடங்களை பாதுகாக்கும் வகையில் அந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.

இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிக்கையில், ‘‘ மொழிப்போர் தியாகிகள் உள்பட அங்குள்ள எந்த கல்லறைகளும் இடிக்கப்படாது. மயான பயன்பாடு இல்லாத பகுதியில் தான் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படுகிறது. எனவே கல்லறை அமைந்துள்ள பகுதிகளுக்கு எந்த இடையுறும் ஏற்படாத வகையில் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும்’’ என்றார். #TNAssembly #Panneerselvam #tamilnews