பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா I5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி வோல்ட்இ, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களுடன் 5.0 இன்ச் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் அசாஹி டிராகன் டிரெயில் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மெட்டல் பாடி வடிவமைப்பு, மீடியாடெக் பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.
பானாசோனிக் எலுகா I5 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, அசாஹி டிராகன் டிரெயில் கிளாஸ்
- 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2500 எம்ஏஎட் பேட்டரி