கைது 
செய்திகள்

பள்ளிக்கரணையில் போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது

பள்ளிக்கரணையில் போதைப்பொருள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், புதுநகர் பஸ் நிலையம் அருகே போதை பொருள் விற்கப்படுவதாக தென்சென்னை இணை கமி‌ஷனர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று போதை பொருள் விற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் அகமது , ஜம்ருல், தூரூல் இஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 40கிராம் ஹெராயின், 4 செல்போன், ரூ.13,800 பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 3 பேரும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதே போல் பள்ளிக்கரணை அடுத்த கோவிலம் பாக்கம், ஈச்சங்காடு சந்திப்பு அருகே ‘மெத்தம் பெட்டமைன்’ எனப்படும் போதைப்பொருள் விற்ற எருக்கஞ்சேரியை சேர்ந்த ராஜா என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT