செய்திகள்

பழனி கோவில் ரோப்காரில் புதிய சாப்ட் பொருத்தும் பணி

பழனி கோவில் ரோப் காரில் புதிய சாப்ட் விரைவில் வரும் என்றும் வந்தவுடன் புதிய சாப்ட் பொருத்தும் பணி நடைபெறும். தற்போது தேய்மானம் உள்ள அனைத்து பாகங்களும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது.

பழனி:

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் வருடாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12 -ந்தேதி முதல் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து ரோப்கார் நிலையத்தில் கீழ் தளத்திலும் மேல் தளத்திலும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக ரோப் கார் நிலைய பணியாளர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேல் தளத்தில் உள்ள சக்கரத்தில் சாப்ட் பழுதடைந்துள்ளதால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு புதிய சாப்ட் தயாரிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. புதிய சாப்ட் விரைவில் வரும் என்றும் வந்தவுடன் புதிய சாப்ட் பொருத்தும் பணி நடைபெறும். தற்போது தேய்மானம் உள்ள அனைத்து பாகங்களும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது.

தற்போது கம்பிவட கயிறு மாற்றும் திட்டம் இல்லை. மேலும் 6 மாதங்களுக்கு பின் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாற்றப்படும்.ஒரு மாத பராமரிப்பு பணி முடிவடைந்த பின் சோதனை ஓட்டமும் நிபுணர்களின் ஆலோசனைக்கு பின் ரோப் கார் இயக்கப்படும் என ரோப்கார் பராமரிப்பு பணியில் இருந்த பொறியாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT