கோப்புபடம் 
செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

பழனி:

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மண்டல பொறுப்பாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மண்டலக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், கரூர் வெள்ளியனை ஆம்புலன்சில் நடந்த ரேடியேட்டர் ஊழலை மறைக்க முறையாக விசாரணை நடத்தாமல், ஆம்புலன்ஸ் ஊழியர்களை பணிநீக்கம் மற்றும் இடமாற்றம் செய்வதை கண்டித்து கோஷமிட்டனர். இதில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலர் கொண்டனர்.