செய்திகள்

பழனி பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை: வியாபாரிகள் முறைகேடு செய்தால் நடவடிக்கை

பழனி பஸ் நிலையத்தில் விதிமுறைகளை மீறி பொருட்களை விற்பனை செய்தது குறித்து சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பழனி:

பழனி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழனி சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடாசலபதி தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் பயன்படுத்தப்படும் எடை கற்கள் உரிய காலத்தில் மறுமுத்திரையிடப்பட்டுள்ளதா? முத்திரைச்சான்று வைக்கப்பட்டுள்ளதா? பொருட்கள் எடை குறைவாகவோ, கூடுதல் விலைக்கோ விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் சில கடை உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

இனிவரும் காலங்களில் வியாபாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். #tamilnews