கைது 
செய்திகள்

செம்மண் அள்ளிய 2 பேர் கைது

பாலமேடு அருகே செம்மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அலங்காநல்லூர்:

பாலமேடு அருகே பாறைப்பட்டி கிராம பகுதியில் செம்மண் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டர் மூலம் செம்மண் அள்ளுவது தெரியவந்தது. உடனடியாக டிராக்டரை கைப்பற்றி டிரைவர் தங்கமணி(வயது 30), சுமை தூக்கும் தொழிலாளர் ரமேஷ்(29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.