விபத்து பலி 
செய்திகள்

பாலமேடு அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

பாலமேடு அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்:

பாலமேடு அருகே முடுவார்பட்டியில் விவசாய நிலத்தில் உழுது விட்டு திரும்பி வரும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் அமர்ந்து வந்த வலசையை சேர்ந்த ராம்குமார்(வயது 21) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் சின்னராஜா(21) காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT