பாலக்கோடு:
தமிழ்நாடு மின்வாரிய பாலக்கோடு செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்தில்
மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலக்கோடு, சர்க்கரை ஆலை, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாடி, புலிகரை, பஞ்சப்பள்ளி,
பிக்கிலி, செக்கோடி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்பட்டி, கோட்டூர், எர்ரனஅள்ளி, சோமனஅள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி
முதல் மாலை 5 மணிவரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.